அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் படப்பிடிப்பு குறித்து...
Lokesh Kanagaraj - Arun Matheswaran.
லோகேஷ் கனகராஜ் - அருண் மாதேஸ்வரன்.படம்: இன்ஸ்டா / அருண் மாதேஸ்வரன்.
Updated on
1 min read

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் டிசி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதற்காக, லோகேஷ் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இப்படத்திற்கான பூஜையும் அண்மையில் நடைபெற்று நவம்பரில் படப்பிடிப்பும் துவங்கியது.

இந்தப் படத்திற்கு டிசி (DC) எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர்.

லோகேஷுடன் பேசுவதுபோல் இருக்கும் காட்சியை இயக்குநர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Summary

An update has been released regarding the DC film in which director Lokesh Kanagaraj is making his acting debut.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com