

ஆஸ்கர் விருதுவென்ற இயக்குநர் அலெக்சாந்த்ரோ கோன்ஸாலே இனாரிட்டுவுடன் டாம் குரூஸ் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
டிக்கர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் திரைத்துறை பங்களிப்புக்காக அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இருந்தும் அவரது நடிப்புக்கென இதுவரை ஆஸ்கர் விருது வழங்காததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்கர் நாயகன் இனாரிட்டுவின் டிக்கர் படத்தில் டாம் குரூஸ் நடித்து வருகிறார்.
இந்தப் படம் அடுத்தாண்டு அக்.2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென வார்னர் ப்ரூஸ் அறிவித்துள்ளது.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு டாம் க்ரூஸ் ஆக்ஷன் அல்லாத ஓர் திரைப்படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இனாரிட்டோவின் ரெவனென்ட் படத்துக்குப் பிறகு முதல் ஆங்கில படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் நிகோலஸ் ஜியாகோபைன், சபினா பெர்மன், அலெக்சாண்டர் டினெலாரிஸ் உடன் இணைந்து எழுதியுள்ளார்கள்.
டாம் குரூஸ் மற்றும் இனாரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தை வார்னர் ப்ரூஸ் வெளியிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.