சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

சென்னை திரைப்பட விழாவில் பறந்து போ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படங்கள் விருது வென்றுள்ளன...
சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!
Updated on
1 min read

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் ராமின் “பறந்து போ” மற்றும் நடிகர் சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிச.11 முதல் டிச.18 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன.

இந்த நிலையில், நிறைவு நிகழ்ச்சியில் விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இயக்குநர் ராம் மற்றும் நடிகர் சிவா ஆகியோரின் கூட்டணியில் வெளியான “பறந்து போ” படம் “சிறந்த தமிழ் திரைப்படம்” எனும் விருதை வென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்துக்கு “2 ஆவது சிறந்த தமிழ் திரைப்படம்” எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்துக்காக நடிகர் சசிகுமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

Summary

At the Chennai International Film Festival, director Ram's "Paranthu Po" and actor Sasikumar's "Tourist Family" films have been awarded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com