நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

மலையாள நடிகர் திலீப்பின் புதிய திரைப்படத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்...

News image
Updated On :19 டிசம்பர் 2025, 4:22 pm IST

மலையாள நடிகர் திலீப் நாயகனாக நடித்து வெளியான “பா பா பா” எனும் புதிய திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகையை காரில் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 8 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப்பை போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கேரள நீதிமன்றம் கடந்த டிச.8 ஆம் தேதி விடுதலை செய்தது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் திலீப் நாயகனாக நடித்துள்ள “பா பா பா” எனும் புதிய திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (டிச. 18) திரையரங்குகளில் வெளியானது.

அறிமுக இயக்குநர் தனஞ்சய் சங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில், நடிகர்கள் மோகன் லால், வினீத் ஸ்ரீனிவாசன், தயான் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில், ரேடார் எனும் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் திலீப் கடத்தல்காரராக நடித்துள்ளார். இதில், ஒரு குறிப்பிட்ட காட்சியில் தொழில்ரீதியான கடத்தல்காரர் (ப்ரொஃபெஷனல் கிட்ணாப்பர்) என நடிகர் திலீப் புகழப்படுவது பல்வேறு தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்த காட்சிகளில், ரமணி எனும் ஒரு கதாபாத்திரத்தை நடிகர் திலீப் கடத்த முற்படுகிறார். காட்சியில் ஒரு பெண் காட்டப்படுகிறார். அப்போது, கடத்தல் மற்றும் பாலின ரீதியான இரட்டை அர்த்தத்துடன் ஒரு வசனம் இடம்பெறுகிறது. பின்னர், ரமணி என்பது ஒரு பசு எனத் தெரியவருகின்றது.

இந்தக் காட்சி, நடிகர் திலீப்பின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை நினைவுப்படுத்துவதாகவும், படத்தின் எழுத்தாளராக பெண் ஒருவர் பணியாற்றிய போதிலும் இத்தகைய வசனங்கள் இருப்பது வருத்தமளிப்பதாகவும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், “பா பா பா” திரைப்படத்துக்கு ஃபஹிம் சஃபர் மற்றும் நடிகை நூரின் ஷரீஃப் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Scenes from the new Malayalam film "Bha Bha Ba" starring actor Dileep, have sparked controversy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.