ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

சூர்யா - 47 திரைப்படம் குறித்து...

suriya

சூர்யா

Published On :20 டிசம்பர் 2025, 4:54 pm IST

நடிகர் சூர்யா புதிய திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருகிறது. இதனையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.

இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரி தோற்றத்தில் சூர்யா கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சிங்கம் - 3 திரைப்படத்துக்குப் பின் சூர்யா மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

suriya do a police officer role in suriya - 47

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.