
வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!
ஒடிசி திரைப்பட முன்னோட்டம் குறித்து...

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.
பிரபல கவிஞர் ஹோமர் எழுதிய ஒடிசி என்கிற கவிதையைத் தழுவி எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் 5 நிமிட முன்னோட்டம் அவதார் பயர் அண்ட் ஏஷ் படத்தை வெளியிட்ட ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இடைவேளையில், இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் ஒடிசியின் காட்சிகளும் உருவாக்கமும் வியப்பில் ஆழ்த்துவதாகவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக இது அமையும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒடிசி திரைப்படம் ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்டதால் இதன் ஐமேக்ஸ் வெளியீட்டைக் காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இதையும் படிக்க: அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





