

சிறகடிக்க ஆசை தொடர் நாயகி கோமதி பிரியா, மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரில் நடிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில், லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா, கமருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மகாநதி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் லஷ்மிபிரியா, சுவாமிநாதன் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடர் டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு மகாநதி ஒளிபரப்பாகி வருகிறது.
மகாநதி தொடருக்கு தமிழில் கிடைத்த வரவேற்பையடுத்து, மலையாள மொழியில் எடுக்கப்படுகிறது. தமிழில் விஜய் - காவேரி (லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) நடிக்கும் பாத்திரங்களில் கோமதி பிரியா - சச்தேவ் நடிக்கவுள்ளனர்.
இந்தத் தொடர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. மலையாளத்தில் இந்தத் தொடருக்கு ஈ புழயும் கடன்னு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரும் ரசிகர்களிடையே பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.