

என் வாழ்க்கை மாற வேண்டும் என்ற ஆசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், ஆனால் எதிர்மறையான விமர்சனங்களால் நடக்குமா என்று தெரியவில்லை என மேடை நடனக் கலைஞரும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா ஜோ தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வாரங்களை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கு கமருதீன் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். கடந்த வாரத்தில் எஃப்ஜே, ஆதிரை என இருவர் வெளியேறினர். அதற்கு முன்பு 10வது வாரத்தில் ரம்யா ஜோவும் வியானாவும் வெளியேறினர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற ரம்யா, வெளியில் தனக்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகம் கிடைத்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய ரம்யா ஜோ, ''இத்தனை ஆண்டுகள் மேடை நடனக் கலைஞராகவே இருந்துவிட்டேன். அதனால், அதிகம் இழிவாக கருதப்பட்டேன். அவமானங்களை எதிர்கொண்டேன். என் வாழ்க்கை மாற வேண்டும் என்பதற்காகவே நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பிக் பாஸ் சென்றால் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
திரைப்படங்கள், சின்ன திரை தொடர்கள் என எதிலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், வெளியே சென்று பார்த்தால் என் மீது எதிர்மறையான விமர்சனங்களே அதிகம் இருந்தன.
இதனால், எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நடந்தால் நான் மீண்டும் மேடையில் ஆடத்தான் செல்ல வேண்டும். எது நடந்தாலும் நான் பிழைத்துக்கொள்வேன். ஆனால் என் வாழ்க்கை மாற வேண்டும் என்ற ஆசையை நான் என்ன செய்வது'' எனக் குறிப்பிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ரம்யா, போட்டிகளில் தீவிரமாக பங்கேற்காமல் அடிக்கடி அழுவது, உடல் நிலையை காரணம் கூறுவது என அடிக்கடி செய்துகொண்டிருந்ததாக ரசிகர்கள் பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் நேர்மறையான கருத்துகளை போல, எதிர்மறையான கருத்துகளும் ரம்யா ஜோவுக்கு கிடைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.