பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ள போட்டியாளர் யார் என்பது குறித்து...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 12 வாரத்தில் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்த வாரம் கமுருதீன் வீட்டின் தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அவரைத்தவிர மற்றவர்களை நாமினினேட் செய்யலாம்.

அந்த வகையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு விஜே பார்வதி, கானா வினோத், அரோரா, விக்கல்ஸ் விக்ரம், அமித் பார்கவ், கனி திரு, திவ்யா கணேஷ், சான்ட்ரா, சுபிக்‌ஷா, சபரிநாதன் ஆகியோரை சக போட்டியாளரை தேர்வு செய்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களிப்பார்கள், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர், இந்த வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவார்.

இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதுவரை நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா, எஃப்ஜே, ஆதிரை ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Summary

The list of contestants likely to be eliminated in the 12th week of Bigg Boss Season 9 has been revealed.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com