திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

சிறை இயக்குநருக்கு கார் பரிசளிப்பு...

News image
Updated On :23 டிசம்பர் 2025, 12:23 pm IST

சிறை திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநருக்கு தயாரிப்பாளர் கார் வழங்கியுள்ளார்.

இயக்குநர் தமிழ் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம் சிறை. விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.

காவலர்கள் பாதுகாப்பிலிருந்து தப்பிச்செல்லும் சிறைக்கைதியைக் குறித்த கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

சிறை திரைப்படம் டிச. 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்வின்போது, படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் லலித் குமார், படம் வெளியாகி வரவேற்பைப் பெறுவதற்கு முன்பே இயக்குநர் சுரேஷுக்கு கார் வழங்கி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன், ‘ஒரு தயாரிப்பாளர் தன் படத்தின் இயக்குநரை இப்படி கௌரவப்படுத்தியது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

இப்படத்தில் இன்னொரு நாயகனாக நடித்த நடிகர் லேகே அக்‌ஷய் குமார் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.