

நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் முனோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிறிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ரெட்ட தல திரைப்படம் உருவாகியுள்ளது.
ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இதில் நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சிஸ் இசையமைத்த இப்படத்தின் 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி இணையத்தில் வைரலானது.
பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.