பான் இந்திய மொழிகளில் வெளியாகும் துரந்தர் - 2

துரந்தர் - 2 வெளியீடு குறித்து....
பான் இந்திய மொழிகளில் வெளியாகும் துரந்தர் - 2
Updated on
1 min read

துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு கொண்டு வருகின்றனர்.

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்‌ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.

பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம், இதுவரை ரூ. 900 கோடி வரை வசூலித்து இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

ஹிந்தியில் மட்டுமே வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது பாலிவுட்டில் பேசுபொருளானதுடன் பிறமொழி ரசிகர்களும் கொண்டாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், துரந்தருக்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைக்குக் கொண்டு தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

இதனால், மார்ச் 19, 2026 அன்று வெளியாகவுள்ள துரந்தர் - 2 திரைப்படமும் வசூலில் மிரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

dhurandhar - 2 movie will be release in pan indian launguages

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com