

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள புதிய படத்தின் இரண்டாவது பாடல் குறித்து சுவாரசியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலில் முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
ரோமியோ பிகசர்ஸ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் காதல் ரீசெட் ரிப்பீட் என்ற புதிய படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் மதும்கேஷ். இவர் ஏற்கெனவே ஜீவாவின் அடியே படத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகியாக ஜியா ஷங்கர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அர்ஜுன் அசோகன், விஜி சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
முதல்முறையாக ஹாரிஸ் இசையில் சித் ஸ்ரீராம் பாடல் பாடியுள்ளார். ’உன்னை நினைத்து’ எனும் இந்தப் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.