ஜன நாயகன்: விஜய் பாடியுள்ள செல்ல மகளே பாடல்!

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் மூன்றாவது பாடல் குறித்து...
The poster of the film Jana nayagan.
ஜன நாயகன் படத்தின் போஸ்டர். படம்: கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.
Updated on
1 min read

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் குரலில் உருவாகியுள்ள செல்ல மகளே எனும் இந்தப் பாடல் நாளை (டிச.26) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை விஜய் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இதன்மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் நடிகர்கள் பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Summary

An update has been released regarding the third song from the film 'Jan Nayagan', starring actor Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com