இந்தாண்டு அதிகளவில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சினிமாவின் வளர்ச்சி வணிக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன.
விதவிதமான சூழல்களில் வித்தியாசமான கதைக்களங்களுடன் திரைபடங்கள் திரைக்கு வந்தாலும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய சில திரைப்படங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தைக் கொடுத்தன. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் வருகை அதிகரித்திருப்பதுடன் விமர்சன, வணிகங்களிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், 2025-ல் இதுவரை 282 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 10 சதவீத திரைப்படங்களே வணிக வெற்றியைப் பெற்றதாகவும் 125-க்கும் குறைவான படங்களே ஓடிடியிலும் வெளியாகியுள்ளதாம்.
சராசரியாக வாரம் 5 திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. இது திரைத்துறைக்கு ஆரோக்கியமாக அமைந்தாலும் வியாபார ரீதியாக பின்னடைவுகளைச் சந்தித்திருப்பது கவலையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.