25 வயது வித்தியாசமுள்ள பெண்ணைக் காதலிக்கும் கதை..! சூர்யா 46 அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!

நடிகர் சூர்யாவின் 46-ஆவது திரைப்படம் குறித்து...
surya 46 pooja stills.
சூர்யா 46 படத்தின் பூஜையில்... படம்: எக்ஸ் / சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்.
Updated on
1 min read

நடிகர் சூர்யாவின் 46-ஆவது திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி பேசியது வைரலாகியுள்ளது.

20 வயது பெண்ணை காதலிக்கும் 45 வயது ஆண் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகக் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்க நாக வம்சி தயாரிக்கிறார்.

இந்தப் புதிய படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், தயாரிப்பாளர் நாக வம்சி பேசியதாவது:

45 ஆணுக்கும் (சூர்யா) 20 வயது பெண்ணுக்கும் (மமிதா பைஜூ) இடையேயான காதல், உணர்ச்சிகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது என்றார்.

இதனால், இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும், நாக வம்சி இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினி படத்தின் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டும் பேசினார்.

முன்னதாக இயக்குநர் இந்தப் படம் முழுமையான குடும்ப திரைப்படமாக இருக்குமெனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா 45- கருப்பு திரைப்படம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சூர்யா 46 - வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். அடுத்ததாக, சூர்யா 47- ஜித்து மாதவன் இயக்கவிருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் பல பரிமாணங்களை அடுத்தாண்டில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

Summary

Suriya 46 also stars Bhavani Sre, Radikaa Sarathkumar and senior Bollywood actor Raveena Tandon portraying key roles

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com