எப்போதுமே விஜய்யின் ரசிகைதான்..! மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி!

நடிகை மாளவிகா மோகனின் பதிவு குறித்து...
Vijay, Malavika Mohanan.
விஜய், மாளவிகா மோகனன். படங்கள்: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்.
Updated on
1 min read

நடிகை மாளவிகா மோகன் நடிகர் விஜய்யின் தளபதி கச்சேரி குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் இசை வெளியீட்டு விழாவுக்குச் செல்ல முடியாவிட்டாலும் தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

இந்த ஜோடி விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது. ஜன நாயகன் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல கதைகளைத் தேடி நடித்துவரும் மாளவிகா மோகனன் தான் எப்போதுமே விஜய்யின் ரசிகை என்று கூறிவருகிறார்.

இந்நிலையில், தான் நடித்துள்ள ராஜா சாப் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் அவர் விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

என்னுடைய படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பிஸியாவதற்கு முன்பு, ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த என்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி விடுகிறேன்.

விஜய் சாருடன் வேலைப் பார்த்தது மிகவும் கௌரமாக கருதுகிறேன். அவரை என் நண்பர் எனக் கூறிக்கொள்வது அதைவிடவும் பெருமையாக இருக்கிறது.

எல்லா வகையிலும் அவர் மிகவும் சிறப்பான மனிதர். பல லட்சக் கணக்கான ரசிகர்களைப் போல நானும் அவருக்கும் அவரது படக்குழுவிற்காகவும் மகிழ்சி அடைகிறேன்.

இப்போதும், எப்போதும் தளபதியின் ரசிகைதான்! எனக் கூறியுள்ளார்.

Summary

Actress Malavika Mohanan has posted an emotional message about actor Vijay's Thalapathy concert.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com