

வீர தீர சூரன் -2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு தற்போது நடிகையாக அசத்தி வருகிறார்.
நவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள சர்வம் மாயா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரின் மகளான ரியா ஷிபு முதன்முதலாக கப் எனும் மலையாள படத்தில் நடித்தார். அதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்த அவர் தற்போது முதன்மையான நாயகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அகில் சத்யன் இயக்கியுள்ள சர்வம் மாயா படத்தில் ரியா ஷிபு தனது நடிப்பினால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஏற்கெனவே இன்ஸ்டா ஸ்டோரிஸ்களின் மூலமாக ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவந்த இவருக்கு சர்வம் மாயா மிகப்பெரிய பாராட்டுகளை அளித்து வருகிறது.
படக்குழு க்யூட்டான டெலுலு என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளது. டெலுலு என்பதற்கு தற்காலத்திய ஜென் ஸி (இசட்) கிட்ஸ்களின் கற்பனையான உலகத்திற்கு வைக்கும் பெயர் எனப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.