2 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருக்கும் ஆசிப் அலியின் படம்! வெளியீடு எப்போது?
நடிகர் ஆசிப் அலியின் டிகி டாகா என்ற புதிய படத்தின் போஸ்டர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
தொடர்ச்சியாக வெற்றித் திரைப்படங்களை அளித்து வரும் ஆசிப் அலிக்கு இந்தப் படம் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
'கள' திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகமே வியந்து பார்த்தவர்தான் இயக்குநர் ரோஹித் விஎஸ். இவரது இயக்கத்தில் டிகி டாகா படத்தில் ஆசிப் அலி நடித்து முடித்துள்ளார்.
2023 முதல் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஆசிப் அலிக்கு காயம் ஏற்பட்டதால் தாமதமானது.
சமீபத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இதன் படப்பிடிப்பை தொடங்கியபோது, “மலையாள சினிமா தனது பொன் அலையில் மகிழ்ந்திருக்கும் வேளையில் இதுவரை அனுபவிக்காத சமரசமற்ற ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை பெரிய திரையில் ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிக்க உழைத்திருக்கிறோம்.
சினிமாவை ரசிக்கும் உங்களிடமிருந்து ஆதரவை மட்டுமே எதிர்பார்க்கிறேன். இதுவரை எனக்கு அளித்த அன்புக்கும் வழி நடத்தல்களுக்கும் நன்றி” எனக் கூறியிருந்தார்.
ஓணம் வெளியீடாக வருமென அறிவிக்கப்பட்டு, பின்னர் வெளியாகவில்லை. சமீபத்தில் ஒரு போஸ்டரை ஆசிப் அலி வெளியிட்டார்.
அதில், “குளிர்வான இரவு, வெப்பமான ஸ்டீல். கிறிஸ்துமஸுக்கு அல்ல, விரைவில் வருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் வாமிகா கேபி, நஸ்லென், லுக்மேன் அவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மிராஜ் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
The poster of actor Asif Ali's new film, Tiki Taka, is attracting attention on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

