

பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்த வாரம் வெளியேறிவிடுவேன் என நடிகர் கமருதீனிடம் விஜே பார்வதி மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு விருப்பப்படி இருந்துகொள்ளுமாறு கமருதீனிடம் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிக்ழ்ச்சி 12 வாரங்களை எட்டியுள்ளது. வார இறுதியான 84 வது நாள், இந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விஜய் சேதுபதி கலந்துரையாடி குறைகளை விமர்சித்தார்.
இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து உறுப்பினர்கள் கலந்துகொண்டு, குறைகளை போட்டியாளர்களிடம் சுட்டிக்காட்டினர். இதனால், போட்டியாளர்களிடையே இந்த வாரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
போட்டியாளர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து ஒவ்வொருவரும் விளக்குமாறு விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டார். அப்போது, பிக் பாஸ் வீட்டில் விஜே பார்வதியிடம் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கமருதீன் விமர்சித்துப் பேசியிருந்தார். இது குறித்து கமருதீனும் விஜே பார்வதியும் தனியாக உரையாடிக்கொண்டிருந்தனர்.
காதல் விவகாரத்தை மட்டுமே தன்னிடம் எதிர்பார்ப்பதாக விஜே பார்வதி கமருதீனிடம் கூறியுள்ளார். ஆனால், அதனைத் தாண்டி போட்டியிலும் தன்னுடைய தனிப்பட்ட பங்கு இருப்பதாக கமருதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இனி நெருக்கமாகப் பழகுவதற்கே தயக்கமாக இருப்பதாகவும், போட்டியில் இருந்து தான் வெளியேற வேண்டும் என நினைப்பதால், இனி விஜே பார்வதியிடம் எச்சரிக்கையாகவே இருப்பேன் என கமருதீன் கூறினார்.
இதனால் வருத்தமடைந்த விஜே பார்வதி, அடுத்த வாரம் தான் வெளியேறிவிடுவேன் அதன் பிறகு விருப்பப்படி இருந்துகொள் என கமருதீனிடம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக, சனிக்கிழமையன்று நடிகர் அமித் பார்கவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஞாயிற்றுக்கிழமையான இன்று மற்றொரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். கனி திரு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜே பார்வதி வெளியேற வேண்டும் என ரசிகர்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.