லைஃப் டைம் செட்டில்மென்ட்... செல்ல மகள் லிதன்யாவின் பேச்சு!
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேச முடியாமல்போன குழந்தை நட்சத்திரம் லிதன்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமான லிதன்யா செல்லமே செல்லமே, சுந்தரி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் விஜய்யின் மகளாக ஜன நாயகன் படத்திலும் நடித்துள்ளார்.
விஜய் குரலில் வெளியான செல்ல மகளே எனும் பாடலில் லிதன்யா இடம்பெற்றிருக்கிறார். நேற்று இரவு மலேசியாவில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு கிடைக்காமல் போன குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் அவர் பேசியதாவது:
எல்லாருக்கும் ஹாய்... நேற்று இசை வெளியீட்டு விழா மிகவும் நன்றாகச் சென்றது. நான் அதற்காக ஒரு பேச்சை தயார் செய்திருந்தேன்.
நேரமின்மை காரணத்தால் பேசமுடியவில்லை...
எல்லாருக்கும் ஹாய்... நேற்று இசை வெளியீட்டு விழா மிகவும் நன்றாகச் சென்றது. நான் அதற்காக ஒரு பேச்சை தயார் செய்திருந்தேன்.
நேரமின்மை காரணத்தால் பேசமுடியவில்லை. அதனால் அங்கு பேச வேண்டியதை இங்கு பேசுகிறேன்.
தேங்க்யூ கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார். எச். வினோத் சார் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி. ஏடிஎஸ் மற்றும் ஆகாஷ் குழுவினர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொண்டதுக்கு நன்றி.
என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணத்தை விஜய்யுடன் அமைத்துக் கொடுத்த சுதன் மாஸ்டருக்கு நன்றி. அனிருத் சார் ஜன நாயகனில் உங்களது அனைத்து பாடல்கள்களும் மிகவும் பிடிக்கும்.
லவ் யூ விஜய் மாமா...
கடைசியாக என்னுடைய ஒரேயொரு விஜய் மாமா... நீங்கள் மிகவும் க்யூட், உங்களது சிரிப்பும் மிகவும் க்யூட்.
இந்த பிரபஞ்சத்திடம் என்ன கேட்டாலும் நடக்குமெனக் கூறுவார்கள். அப்படி இந்தப் பிரபஞ்சம் எனது வேண்டுதலை சரியான நேரத்தில் கேட்டுவிட்டது என நினைக்கிறேன்.
உங்களிடம் பேசியது, நடித்தது, நடனமாடியது என எதுவுமே என்னால் மறக்க முடியாது. ஒரு தளபதி ரசிகையாக இதைவிட எனக்கு பெரிய தருணம் இருந்துவிடவாப் போகிறது?
இதுதான் என் லைஃப் டைம் செட்டில்மென்ட் மொமண்ட். நீங்கள் இப்போது மட்டுமே அல்ல, எப்போதுமே எங்களுடைய தளபதி. லவ் யூ விஜய் மாமா எனக் கூறியுள்ளார்.
Child actress Lithanya, who was unable to speak at the music launch event, has released a video on her Instagram page.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

