

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான போட்டி(Ticket To Final) நடைபெறவுள்ளதால், போட்டியாளர்கள் ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர்.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா, எஃப்ஜே, ஆதிரை, கனி திரு, அமித் பார்கவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது, பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்திற்கு நாமினேஷன் இன்று(டிச. 29) நடைபெற்றது.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும். இந்த வார வீட்டுத் தலையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வதியை யாரும் எமினேட் செய்ய முடியாது.
இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு கானா வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சுபிக்ஷா, சபரிநாதன், கமருதீன் ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களிப்பார்கள், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர், இந்த வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவார்.
இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேபோல, நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான டிக்கெட்டை(Ticket To Final), யார் பெறுவார் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.