கல்லூரி மாணவனாக பாசில் ஜோசப்..! அதிரடி படத்தின் போஸ்டர்!

மலையாள நடிகர் பாசில் ஜோசப்பின் புதிய படம் குறித்து...
Basil Joseph
பாசில் ஜோசப்படம்: எக்ஸ் / டோவினோ தாமஸ்
Updated on
1 min read

மலையாள நடிகர் பாசில் ஜோசப் கல்லூரி மாணவனாக நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் அவர் நடித்துள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.

அதிரடி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாசில் ஜோசப், டோவினோ தாமஸ், வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் தலைப்பு டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

டாக்டர் அனந்து, பாசில் ஜோசப் தயாரிப்பில் பால்சன் சகாரியா, அருண் அனிருதன் எழுத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

அருண் அனிருதன் இயக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டரில், ‘சாம்பாயைச் சந்தியுங்கள். (வரிசை எண்.31, பி.டெக் முதலாம் ஆண்டு, சிவில் எஞினியரிங், பிசிஇடி)’ என பாசில் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

டோவினோ தாமஸ், ‘வயது பின்னோக்கிச் செல்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Along with Basil Joseph, Athiradi brings together Tovino Thomas and Vineeth Sreenivasan in lead roles.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com