லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பல காட்சிகளில் அழுதேன்... சிறையைப் பாராட்டிய ஷங்கர்!

இயக்குநர் ஷங்கர் சிறை திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்...

Published On :

இயக்குநர் ஷங்கர் சிறை திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்‌ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் சிறை.

காதல் கதைக்குப் பின் காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டுள்ளது. இந்தாண்டின் இறுதி வெளியீடாக டிச.25 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், இப்படம், இதுவரை ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிறை திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், “சிறை ஒரு சிறந்த திரைப்படம். பல காட்சிகளில் கண்ணீர் சிந்தினேன். நடிகர் விக்ரம் பிரபுவின் அழுத்தமான நடிப்பும் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் கதாபாத்திரங்களின் வெகுளித்தனமான உணர்வுப்பூர்வ நடிப்பு அழகாக படம் முடிந்த பின்பும் மனதிலேயே தங்குகிறது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் தன் முதல் படத்திலேயே நம் மனங்களைச் சிறைபடுத்திவிட்டார். இப்படத்தைத் தயாரித்த லலித் குமாருக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமா இந்தாண்டின் இறுதியில் முக்கியமான படத்துடன் நிறைவடைகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.