

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் நவ.4ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகராக ஜன நாயகனே தனது கடைசி படமென தவெக தலைவர் விஜய் கூறியுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தில் நடிகர் விஜய் காவலதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸ்ஸியும் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஜீ 5 தொலைக்காட்சியில் வரும் நவ.4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி சுமார் 6 மணி நேரம் கொண்டதாக இருக்குமெனத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.