

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காலை 11.11 மணிக்கு இந்தப் போஸ்டரை வெற்றிமாறன் வெளியிடவிருக்கிறார்.
தமிழகத்தையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றான லட்சுமிகாந்தன் கொலை வழக்கு இன்றும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இக்கொலை வழக்குக்குப் பின் தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையே மாறியது.
இந்துநேசன் என்கிற அவதூறு இதழை லட்சுமி காந்தன் நடத்தி வந்தார். அதில், அன்றைய நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்க அவதூறுகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். அப்படி, தமிழ் சினிமாவின் வணிகத்திலும் திறமையிலும் உச்சத்தில் இருந்த நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவரையும் மோசமாகத் தாக்கி எழுதி வந்ததால் அவர்கள் இருவரும் கூலிப்படையினரை ஏவி லட்சுமி காந்தனை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
பாகதவருக்கும் என்எஸ்கேகும் ஆயுள் தண்டனை கிடைத்தது. இது, தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இவர்கள் இருவரும் 4 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பின் லண்டன் பிரிவு கவுன்சில் மூலம் மேல்முறையீட்டில் விடுதலை அடைந்தனர்.
கொன்றால் பாவம் திரைப்படத்தை இயக்கிய, தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ எனும் பெயரில் உருவாகியுள்ளது.
2எம் சினிமாஸ் தயாரிக்ககும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெற்றிமாறன் ஜன.1ஆம் தேதி வெளியிடுகிறார்.
தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதில் நடிகர் வெற்றி, நடிகை பிரிகிடா சகா, கவிதா பாரதி, சுப.வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான காந்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.