இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் நடிகர் பிரபு தேவாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு கதாநாயகிகளுடன் பிரபு தேவா நடிக்க, நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகும் இது 2026 கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
ஆச்சரியமாக, இப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களையும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானே பாடியுள்ளார்.
இந்த நிலையில், மூக் வாக் திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மானும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் ஏ. ஆர். ரஹ்மான் முதல்முறையாக நடிகராக நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.