

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் - 2 தொடரில் பிரபல தொகுப்பாளினி தியா மேனன் நடிக்கிறார்.
எதிர்நீச்சல் - 2 தொடரில் பார்வதி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி, சபரி பிரசாந்த், விபு ராமன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்தப் பாகத்திலும் தொடர்கின்றனர். முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் - 2 தொடரில் தியா மேனன் நடிக்கிறார். இவர் மதிவதனி பாத்திரத்தில் ஆட்சியராக நடிக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
யார் இந்த திவ்யா மேனன்?
மலையாளத்தில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த திவா மேனனுக்கு, சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளியாக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து, மகான் கணக்கு என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில ஆவணப்படங்களிலும் இவர் நடித்திருந்தார்.
தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தியா தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன்னதாக, நிலா தொடரிலும் இவர் நடித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடர்வோர்களைக் கொண்டுள்ள தியா மேனன், எதிர்நீச்சல் தொடருக்கு வருகைத் தந்துள்ளது தொடரில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.