எதிர்நீச்சல் நடிகைகளுக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்பு!

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர், நடிகைகளுக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
எதிர்நீச்சல் குழு
எதிர்நீச்சல் குழுபடம் | இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர், நடிகைகளுக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஆனால், சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இவர்கள் செல்லவுள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் எதிர்நீச்சல். முதல் பாகத்துக்கு டிஆர்பி புள்ளியிலும் மக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்ததால், தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்த நடிகர், நடிகைகளே பெரும்பாலும் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகின்றனர். எனினும் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு, தற்போது கிடைக்கவில்லை.

இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகைகளுக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.

மதுமிதா
மதுமிதா

மதுமிதா

எதிர்நீச்சல் தொடரில் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை மதுமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரில் நிலா என்ற பாத்திரத்தில் இவர் நடிக்கிறார்.

சத்யா - ஸ்ரீகுமார்
சத்யா - ஸ்ரீகுமார்

சத்யா

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து இப்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் சத்யா தேவராஜனும் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதியத் தொடரில் நடிக்கவுள்ளார். இத்தொடருக்கு தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவருக்கு ஜோடியாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார்.

ஜான்சி ராணி
ஜான்சி ராணி

காயத்ரி

சத்யா தேவராஜனை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி ஆக நடித்து, இப்போது இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை காயத்ரி, விஜய் தொலைக்காட்சியின் சிந்து பைரவி தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

சத்யாவுடன் விமல்
சத்யாவுடன் விமல்

விமல் குமார்

அதுபோல எதிர்நீச்சல் தொடரில் கரிகாலனாக நடித்துப் பிரபலமடைந்த விமல் குமாரும் சிந்து பைரவி தொடரில் நடிக்கிறார். இவர் பூங்கொடி என்ற புதிய தொடரிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ரித்திக்
ரித்திக்

ரித்திக்

இதேபோன்று ஆதி குணசேகரனின் மகனாக தர்ஷன் பாத்திரத்தில் நடித்த ரித்திக், பூங்கொடி தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவ்வாறு எதிர்நீச்சல் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற பாத்திரங்கள் அடுத்தடுத்த தொடர்களில் நடிக்கின்றனர். எதிர்நீச்சல் தொடரில் வரும் பாத்திரங்களாகவே இவர்களைப் பார்த்துவந்த நிலையில் தற்போது புதிய தொடர்களில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இது எதிர்நீச்சல் தொடருக்கு பின்னடைவாக இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிக்க | மீண்டும் மாகாபா உடன் இணையும் செளந்தர்யா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com