நடிகர் கவின் நடித்த மாஸ்க் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியைப் படம் சந்திக்கவில்லை.
தொடர்ந்து, வெற்றி மாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் கதாநாயகியாக ருஹானி ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளை நிறைவு செய்த என்னை அறிந்தால்!
இந்த நிலையில், இப்படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் அப்டேட்கள் இனி ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கும் படமென்பதால் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் மீதான ஆவலும் எழுந்துள்ளது.