மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

சர்வதேச விருதுபெற்ற பேட் கேர்ள்!

பேட் கேர்ள் திரைப்படத்துக்கு சர்வதேச விருது...

Published On :

பேட் கேர்ள் திரைப்படம் ரோட்டர்டம் திரைவிழாவில் விருது வென்றுள்ளது.

இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியிடப்பட்டது.

முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் பள்ளி காதல் வாழ்க்கை, முதல் முத்தம், காதல், ஆசைகள், எதிர்பார்ப்புகளை வைத்து படம் நகர்வதாகத் தெரிகிறது.

டீசரில் பேசப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் பிராமணர்களை மோசமாக சித்திரிப்பதாகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக், இயக்குநர் மோகன் ஜி தொடர்ந்து தன் அதிருபதியை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

பேட் கேர்ள் படக்குழுவினர்.

பேட் கேர்ள் படக்குழுவினர்.

இந்த நிலையில், ரோட்டர்டம்மில் நடைபெற்ற 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பேட் கேர்ள் திரைப்படத்துக்கு அறிமுக இயக்குநர்களை கௌரவிக்கும் நெட்வொர்க் ஃபார் தி புரமோஷன் ஆஃப் ஆசியன் சினிமா (NETPAC - Network for the promotion of asian cinema) விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.