நடிகை ஜான்வி கபூர் தமிழ் இணையத் தொடரில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து பெரிதாகக் கவனிக்கப்பட்டார். தற்போது, ஹிந்தியில் பரம் சுந்தரி படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: கவினின் புதிய பட அறிவிப்பு!
இதற்கிடையே, ஸ்ரீதேவியின் மகள் ஏன் இன்னும் தமிழுக்கு அறிமுகமாகவில்லை என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இயக்குநர் சற்குணம் இயக்கும் தமிழ் இணையத் தொடரில் ஜான்வி கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான் இந்திய மொழியில் உருவாகும் இத்தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.