நடிகர் சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமல்ஹாசனுடன் இந்தியன் - 2, மிஸ் யூ என்ற படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இவரது 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
இதையும் படிக்க: ஜி. டி. நாயுடுவாக மாதவன்... படப்பிடிப்பு துவக்கம்!
இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மிடில் கிளாஸ் குடும்பத்தின் சொந்த வீடு கனவாக இப்படம் உருவாகி வருவதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்கு 3பிஎச்கே எனப் பெயரிடப்பட்ட டீசரை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.
தற்போது, படத்தின் படப்பிடிப்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்பட சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே வெளியீடாக இப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.