
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் ரூ.100 கோடி வசூலை நோக்கி பயணிக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படம் பிப்.7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது.
சுமார் 55 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 80.12 கோடியை 5 நாளில் வசூலித்து அசத்தியுள்ளது.
இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
நாக சைதன்யாவின் கடைசியாக வெளியான கஸ்டடி படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
2 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சாய் பல்லவி தெலுங்கில் நடித்து மீண்டும் ஹிட் அடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.