
தங்கமகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கும் தொடர் தங்கமகள். இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் அஸ்வினி நடிக்கிறார்.
ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட அஸ்வினி, எளிமையான குடும்பத்துக்கு பணிப்பெண்ணாக சென்று நாயகனை(யுவன்) காதலிக்கிறார், இதுவே இத்தொடரின் மையக்கரு.
தங்கமகள் தொடர் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய தொடரான ‘தனம்’ தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிற்பகல் 3. 30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் நிறைவடைந்ததால், தங்கமகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.