நடிகர் யோகி பாபு தனக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நடிகர் யோகி பாபு இன்று அதிகாலை சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதியதாகக் கூறப்பட்டது.
இத்தகவல் வேகமாகப் பரவியதுடன் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடங்களில் வெளியானது.
இதையும் படிக்க: தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படப்பிடிப்பு துவக்கம்!
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து யோகி பாபு விளக்கமளித்துள்ளார்.
அதில், ”எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன். யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. மேலும், சில இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் இந்தத் தகவலை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விஷயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அவர்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.