நடிகர் அஜித்துடன் நல்ல சந்தர்ப்பத்தில் இணைந்து நடிப்பேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முத்துக்குமரன்!
இந்த நிலையில், கல்லூரியில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதியிடம், “ஏன் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை?” எனக் கேள்வி கேட்டனர்.
அதற்கு, விஜய் சேதுபதி, “நிறைய பேர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். நடிகர் அஜித்துடன் நான் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், நிகழவில்லை. அஜித் சார் மிக நல்ல மனிதர். நல்ல சந்தர்ப்பம் அமைந்தால் இனி நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பேன்" எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.