ரஞ்சனி தொடர் 100 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
100வது நாளையொட்டி குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விடியோவை நாயகி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நடிகை ஜீவிதா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தோஷ் நடித்துவருகிறார்.
இவர்களுடன் கிரிஷ், சுதர்சனம், சரத்குமார், சல்மான், ரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரஞ்சனி தொடர், நண்பர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கதையாக எடுக்கப்படுகிறது.
புதுமுகங்கள் நடிக்கும் இத்தொடருக்கு, 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே தொடரின் மையக்கரு. இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஞ்சனி தொடர் கடந்த வாரத்தோடு 100 நாள்களை நிறைவு செய்தது. இதனைக் கொண்டாடும் வகையில், கேக் வெட்ட திட்டமிட்ட குழுவினர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து 100 நாள்கள் நிறைவைக் கொண்டாடியது.
ரஞ்சனி குழுவினருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிரபுதேவா உடன் நடிக்கும் பிக் பாஸ் போட்டியாளர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.