
சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தொடர் குழுவினர் பங்கேற்று அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா.
தொடர்ந்து, டிக்டாக் செயலியில் விடியோ வெளியிட்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர், தமிழ் சினிமாவில் நயன்தாராவின் ஐரா, காஞ்சனா - 3, கபாலி உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, சுந்தரி தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார் கேப்ரியல்லா. இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
சுந்தரி தொடரின் முதல் பாகத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டு, 1145 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது.
முன்னதாக, தான் கருவுற்று இருப்பதாக நடிகை கேப்ரியல்லா இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் கேப்ரியல்லாவின் வளைகாப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுந்தரி தொடர் குழுவினர் ஒட்டுமொத்தமாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
கேப்ரியல்லாவின் வளைகாப்பிற்கு அரவிஷ், தீபா உள்ளிட்ட சுந்தரி தொடர் குழுவினர் பங்கேற்று அவரை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், விடியோக்களையும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும், வளைகாப்பு நிகழ்ச்சியில் சுந்தரி தொடர் குழுவினரோடு கேப்ரியல்லா நடனமாடும் விடியோ அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.