
புன்னகைப் பூவே தொடரின் நாயகி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். தொடர்களை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், சைத்ரா சக்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜய்யுடன் சுவாரஸ்ய நிகழ்வுகள்: வைரலாகும் பார்த்திபனின் பதிவு!
இந்த நிலையில், புன்னகைப் பூவே தொடரில் கலைவாணி பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சைத்ரா சக்காரி இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
நடிகை சைத்ரா சக்காரி இத்தொடரில் இருந்து விலகிய நிலையில், இவருக்கு மாற்றாக நடிகை ஐஷ்வர்யா நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கு மொழி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இனி வரும் எபிசோடுகளில் கலைவாணி பாத்திரத்தில் நடிகை ஐஷ்வர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.