நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் - 3 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.
லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதுடன் கடுமையான இணைய கிண்டல்களை எதிர்கொண்டது. ஆனாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி - 2!
தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தில் கவனம் செலுத்தினார். அப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், இந்தியன் - 2 தோல்வியால் இந்தியன் - 3 படப்பிடிப்பில் மேற்கொண்டு செலவு செய்ய லைகா விரும்பாததால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில மாதங்களுக்குள் நடிகர் கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு படப்பிடிப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்தார் - 2 என்ன ஆனது?

ராம் சரணுடன் சிறப்பு நடனமாடும் ஸ்ருதி ஹாசன்!

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!
கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

