
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார்.
சிவராத்திரியையொட்டி கோயிலில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இருந்தபோதிலும், பொறுமையாக வரிசையில் நின்று வழிபட்டார்.
தென்னிந்திய சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். தமிழில் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தற்போது கூலி, ஜனநாயகன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதால், சிறிய படங்களுக்கு இசையமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
பல படங்கள் கைவசமிருந்தாலும் ஆன்மிகத்திற்கு அனிருத் நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. சிவ பக்தரான அனிருத், மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
பக்தர்கள் வெள்ளத்திலும் பொறுமையாக வரிசையில் நின்று, வழிபாடு செய்தார். கற்ப கிரகத்திற்கு அருகில் சென்றதும் நீண்ட நேரம் கண்களை மூடி வழிபாடு நடத்தினார். இது தொடர்பான விடியோக்கள் வெளியாகியுள்ளன. இதில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கூலி படத்தின் புதிய போஸ்டரில் இருப்பது யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.