
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் (வயது 85) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார்.
வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக வியாழக்கிழமை காலை தகவல்கள் பரவின.
இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு தகவல் தெரிவித்த விஜய் யேசுதாஸ், அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
இந்திய இசை உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் ரசிகா்களை வசீகரித்து வருபவர் கா்நாடக இசைக் கலைஞரும், பின்னணி பாடகருமான யேசுதாஸ்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார்.
இவர் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலதலைமுறை நடிகர்களுக்காக 700-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும் 8 தேசிய விருதுகளும் அவர் வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.