
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படங்களின் தகுதிப் பட்டியலில் சூர்யாவின் கங்குவா இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு மார்ச் மாதம் 97-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு போட்டியிட, சிறந்த சா்வதேச முழு நீள திரைப்பட பிரிவுக்கு 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து திரைப்படங்கள் அனுப்பப்பட்டன.
இந்தியாவிலிருந்து கங்குவா, ஆடு ஜீவிதம், ஆல் வி இமாஜின் ஏஸ் லைட் (All we imagine as light), லாபதா லேடீஸ் உள்ளிட்ட தேர்வானது. ஆனால், லாபதா லேடீஸ் பட்டியலிலிருந்து வெளியேறியது.
இதையும் படிக்க: விடாமுயற்சி வெளியீடு எப்போது?
இந்த நிலையில், சிறந்த படங்களுக்கான பட்டியலில் சமர்பிக்கப்பட்ட 323 திரைப்படங்களிலிருந்து 207 படங்கள் தகுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.
அதில், நடிகர் சூர்யாவின் கங்குவா, ஆடுஜீவிதம், ஆல் வி இமாஜின் ஏஸ் லைட் படங்கள் தகுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இப்படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஜன. 8 - ஜன. 12 வரை நடக்கும் வாக்களிப்பு முறையில் அதிக வாக்குகளைப் பெற வேண்டும். முடிவுகள் ஜன. 17 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.