பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதி 5 போட்டியாளர்களின் பட்டியலை நடிகை விசித்ரா வெளியிட்டுள்ளார்.
முத்துக்குமரன் / தீபக் / செளந்தர்யா
முத்துக்குமரன் / தீபக் / செளந்தர்யாபடம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதி 5 போட்டியாளர்களின் பட்டியலை நடிகை விசித்ரா வெளியிட்டுள்ளார்.

கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விசித்ரா, இம்முறை டாப் 5 இடத்தைப் பிடிக்கவுள்ள போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 24 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் டிக்கெட் டூ ஃபினாலே வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு ரயான் முன்னேறியுள்ளார். எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களில் 4 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் முன்னாள் போட்டியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதியில் நிலைத்திருக்கக்கூடிய 5 போட்டியாளர்களின் பட்டியலை நடிகை விசித்ரா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: தர்ஷிகா, அன்ஷிதாவிடம் மன்னிப்பு கோரிய வி.ஜே. விஷால்!

அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் தீபக் உள்ளார். மிகக் கடினமான சூழலையும் மிகவும் சாந்தமாகக் கையாளுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது இடத்தை முத்துக்குமரனுக்கு கொடுத்துள்ளார். விளையாட்டில் அவரின் கவனம் ஈடு செய்ய முடியாதது. மிகத் தெளிவான மனிதர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது இடத்தை ஜாக்குலினுக்கு கொடுத்துள்ளார். சவால்களை நேரடியாகச் சந்திக்கிறார். தன் குணம் மாறாமல் இருப்பதால் வலுவான போட்டியாளர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நான்காவது இடத்தை ரயானுக்கு கொடுத்துள்ளார். நிலையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆட்டத்தை வழங்குபவர். தான் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பதை நிரூபித்துக்கொண்டே வருபவர் என புகழ்ந்துள்ளார்.

ஐந்தாவது இடத்தை பவித்ராவுக்கு வழங்கியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் அமைதியான மற்றும் சூழல்களை சமாளிக்கக்கூடிய திறன் கொண்டவர். மிகவும் கண்ணியமான ஆட்டத்தின் மூலம் மற்றவர்களுக்கு முன்னுதாரனமான மாறியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் செளந்தர்யா, வி.ஜே. விஷாலின் பெயர் இடம்பெறாததால் அவர்களின் ரசிகர்கள் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.