
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தை சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் கைவசம் இத்தனை படங்களா?
இந்த நிலையில், ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் 16-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வயதானவரின் இறுதிச்சடங்கை மையமாக வைத்து படத்தின் கதை இருக்கலாம் எனத் தெரிகிறது.
அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு, ‘பெருசு’ எனப் பெயரிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.