விளம்பரம் தேவைப்படாத சூப்பர் ஸ்டார் அஜித் குமார்!!

ஹிசாப் பராபர் படத்தின் புரோமோ நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார் குறித்து நடிகர் மாதவன் பாராட்டு
நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார்Instagram | Ajith Kumar Racing Team
Published on
Updated on
1 min read

ஹிசாப் பராபர் படத்தின் புரோமோ நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட தனியார் செய்தி நிறுவனப் பேட்டியில் நடிகர் அஜித் குமார் குறித்து நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் அஷ்வனி தீர் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், நீல் நிதின் முகேஷ், கீர்த்தி குல்ஹாரி, ரஷாமி தேசாய் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிசாப் பராபர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கான புரோமோ நிகழ்ச்சியின்போது, தனியார் செய்தி நிறுவனப் பேட்டியில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.

மேலும், இந்தப் பேட்டியில் நடிகர் அஜித் குமார் குறித்தும் நடிகர் மாதவன் பாராட்டிப் பேசினார். நடிகர் அஜித் குறித்து மாதவன் கூறியதாவது, ``நடிகர் அஜித் ஒரு பந்தய வீரர். அவருக்கு பைக்குகள் குறித்து நன்கு தெரியும். அவர் ஈடுபடும் அனைத்திலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார். அவர், அனைத்திலும் அளவுடனேயே பேசுவார்.

அதுமட்டுமின்றி, சினிமா வரலாற்றில், தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லாத ஒரே சூப்பர் ஸ்டார் அஜித் குமார் மட்டுமே. இது நம்ப முடியாததுதான். அவரின் படங்கள் அஜித் குமாரின் படங்கள் என்ற பெயரிலேயே அதிகம் பேசப்படுகின்றன.

அவர், தனது திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் எதுவும் செய்வதில்லை; நேர்காணல்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால், இதுபற்றி ஹிந்தி நடிகர்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

துபையில் ஜனவரி 11 ஆம் தேதியில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 911 GT3 R பிரிவில், நடிகர் அஜித் குமாரின் குழுவான அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தினர். இந்தக் கார் பந்தயத்தைக் காணச் சென்ற நடிகர் மாதவன், வெற்றிபெற்ற அஜித் குமாரை ஆரத் தழுவி, வாழ்த்து தெரிவிக்கும் விடியோவும் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com