
பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு முதல்முறையாக தீபக் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் முத்துக்குமரன். இது குறித்து விடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றிக் கோப்பையை முத்துக்குமரன் வென்றார். முத்துக்குமரன் பிக் பாஸ் வெற்றியாளராக வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தவர்களில் முதன்மையானவர் தீபக்.
இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் தன்னலமற்று உதவிக்கொண்ட விதம் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் வீட்டில் அண்ணன் - தம்பியாக இருந்த இவர்கள், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் தங்கள் உறவைத் தொடர்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 19) நிறைவு பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது.
மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் கோப்பையை வென்ற பிறகு முதல்முறையாக தீபக் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார் முத்துக்குமரன். அங்கு தீபக் குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது தீபக் மற்றும் அவரின் மனைவியுடன் முத்துக்குமரன் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் தீபக்கின் மனைவியை பாராட்டி முத்துக்குமரன் பேசியதாவது,
''மிக்க மிக்க நன்றி. ஆனால் உங்கள் மீது பயங்கர கோபம். பிக் பாஸ் வீட்டில் விஷால், ரயான், அருண் பிரசாத் ஆகியோரைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் தீபக்கைத் தாண்ட முடியவில்லை. 45 வயதில் இந்த மனுஷனை தயார் செய்து அனுப்பி வைத்து எங்களைப் பாடாய் படுத்திவிட்டீர்கள்.
அதனால் மிக்க நன்றி. பிக் பாஸ் வீட்டில் அவர் செய்த அத்தனை விஷயங்களுக்கும் நீங்கள் ஆதாரமாய் இருந்துள்ளீர்கள் என்பதற்காக நன்றி. உள்ளே இருந்த அனைத்துப் போட்டியாளர்களும் யார் தீபக்கின் வழிகாட்டி எனத் தேடிக்கொண்டிருந்தனர். அதனைச் செய்த உங்களுக்கு நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸுக்குப் பிறகு அன்ஷிதாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.