அடுத்த பிறவியில் செளந்தர்யாவாகப் பிறக்க ஆசைப்படும் பவித்ரா ஜனனி!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா ஜனனி அடுத்த பிறவியில் செளந்தர்யாவாகப் பிறக்க விருப்பம்.
பவித்ரா ஜனனி / செளந்தர்யா
பவித்ரா ஜனனி / செளந்தர்யாபடம் |எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா ஜனனி அடுத்த பிறவியில் செளந்தர்யா நஞ்சுண்டனாக பிறக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ராணவ் உடன் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் அற்புதமான மனிதர் எனவும் பவித்ரா புகழ்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் பவித்ரா ஜனனி. பிக் பாஸ் வீட்டில் சண்டையிட்டு, வாக்குவாதம் செய்து, கடும் போட்டிபோட்ட பலர் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக பாதியிலேயே வெளியேற்றப்பட்டனர்.

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்கவே தகுதி இல்லாத நபர் என பலராலும் இகழப்பட்ட பவித்ரா, பிக் பாஸ் வீட்டில் 105 நாள்கள் இருந்து பலருக்கும் பதிலடி கொடுத்தார்.

அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து பிக் பாஸ் போட்டியை விளையாடி மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை பவித்ரா நிரூபித்துள்ளார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடும்போது செளதர்யா, ராணவ் குறித்து பவித்ரா கூறியதாவது,

''பிக் பாஸில் இருந்து வந்ததில் இருந்து இரண்டு நாள்கள் வீட்டிலேயே தான் இருந்தேன். செல்போன் எடுத்து பார்க்கும்போது, விடியோக்களைப் பார்க்கும்போது நாம் இவ்வளவு செய்துள்ளோமா? என்று தோன்றியது. வெளியே எல்லோரும் என்னிடம் பேசும் விதம் சந்தோஷமாக இருக்கிறது. ஏஞ்சல் என்று பலர் கூறுகின்றனர். நல்ல ஆன்மா என்று என்னைக் குறிப்பிடுகின்றனர். அதைக் கேட்கும்போது மனநிறைவாக இருக்கிறது.

செளந்தர்யா தனித்துவமானவர். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் செளந்தர்யா, உன்னை மாதிரி தான் பிறக்க வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே சொன்னேன்.

எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் செளந்தர்யா யோசிக்கமாட்டாள். அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்துவிடுவாள். செய்துவிட்டு, ஆமாம் நான் இதை செய்தேன், என்ன இப்போ? இது தான் நான் என்கிற மனநிலையில் இருப்பாள்.

அதை பார்க்கவே ஜாலியாக இருக்கும். இவள் என்ன, தோன்றுவதை எல்லாம் செய்கிறாள். யாரை பற்றியும் யோசிக்க மாட்டேங்கிறாளே?, இதுவும் ஒரு மாதிரி நல்லாத் தான் இருக்கிறது என்று அவளைப் பார்த்து நிறைய ரசித்துள்ளேன்.

ராணவ் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிகுந்த நபர். ராணவ் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆழமாக பேசிக் கொண்டிருக்கும்போது கூட ராணவை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும். அவர் ஒரு நல்ல ஆன்மா. எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளமாட்டார். நல்ல மனிதர். அவரை சுற்றி நடப்பதை தாண்டி அவர் என்ன செய்கிறார் என்பதில் கவனமாக இருப்பார்'' என்றார் பவித்ரா.

செளந்தர்யாவைப் புகழ்ந்து பேசியுள்ளதால் இவரின் ரசிகர்கள் பவித்ரா விடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் அர்ச்சனா - அருண் பிரசாத் திருமணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com