ஓய்வு குறித்து பேசிய ரஷ்மிகா மந்தனா..! ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை ரஷ்மிகா மந்தனா சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசியதாவது...
ரஷ்மிகா மந்தனா.
ரஷ்மிகா மந்தனா.
Published on
Updated on
1 min read

நடிகை ரஷ்மிகா மந்தனா சாவா என்ற ஹிந்தி படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து இனிமேல் ஓய்வு பெற்றாலும் கவலையில்லை எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் நேஷ்னல் கிரஸ் என ரஷ்மிகாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அன்புடன் அழைப்பது அவரது வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது.

மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக (சாவா) பாலிவுட்டில் உருவாகியுள்ளது. இந்தப் படம் பிப்.14ஆம் தேதி வெளியாகிறது.

புதிய பட போஸ்டர்.
புதிய பட போஸ்டர்.படம்: எக்ஸ் / ஏ மேட்டோக் ஃபிலிம்ஸ்

லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களின் இயக்குநர் லக்‌ஷ்மண் உத்தேகர் இயக்கும் இந்தப் படத்தில் சத்ரபதி சம்பாஜியாக ஹிந்தி நடிகர் விக்கி கௌஷல் நடித்திருக்கிறார். சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஷ்மிகா மந்தனா பேசியதாவது:

ஓய்வு பெற்றாலும் கவலையில்லை

முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு நடிகைக்கு மகாராணி ஏசுபாய் -ஆக நடிக்க முடிந்தது மகிழ்ச்சி. என் வாழ்நாளில் இதைவிடவும் பெரிதாக எதையும் கேட்க முடியாது. இதைக் கௌரவமாக கருதுகிறேன்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஓய்வு பெற்றாலும் கவலை இல்லை என லக்‌ஷ்மணன் சாரிடம் கூறினேன்.

நான் டிரைலரை பார்த்து அழும் நபரல்ல. ஆனால், இந்த டிரைலர் உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தி என்னைப் பேசவிடாமல் மௌனமாக்கியது.

விக்கி கௌசல் கடவுள் போலிருக்கிறார். அவர்தான் சாவா (சிங்கக் குட்டி) என்றார்.

அடுத்தடுத்த பெரிய படங்கள்

அனிமல், புஷ்பா - 2 திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை ரஷ்மிகா உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

தெலுங்கை தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ.15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

அடுத்து, குபேரா, ‘தி கேர்ள்ஃபிரண்ட், சாவா, சிக்கந்தர் என பல பெரிய படங்கள் வரிசையாக வரவிருக்கின்றன. இந்தாண்டு ராஷ்மிகாவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com